ஒரு பறவையின் சிறகடிப்பு

ஒரு பறவையின்
சிறகடிப்பு !!

ஒடியாத என்னையும்
ஓடிய வைத்தது
அந்தப் பறவையின்
சிறகடிப்பு !

யாருக்குந் திறக்காத
என் மனக் கதவுகளை
முட்டித் தகர்த்தது
அந்த வொரு
பறவையின் சிறகடிப்பு !

தூங்கிக் கிடந்த
என் ஈர இமைகளைத்
துவட்டி எழுப்பியது
அந்தப்
பறவையின் சிறகடிப்பு !

படியாத என்னையும்
படிய வைத்தது
ஒரு
பறவையின் சிறகடிப்பு !!

சிறகடித்த
அந்தப்
பறவையை அறிய
ஆவலுற்றேன் !

நீல வானம் இல்லை
நீண்ட உடலும் இல்லை
கீசுக் குரலும் இல்லை
கூரான அலகும் இல்லை !!

ஆம்
அப்படியொரு விசித்திரப்
பறவை அது !!

கரிய நிறத்தில்
தோன்றிய அந்த
சிறகடிப்பு ,,,

அடர்ந்த எனது
கவிக்காட்டில்
அக்கினியை மூட்டிக்
கிளம்பியது !!

ஆம்
என்னை முழுதாய் மயக்கியது
என் ஆசைக் கொருத்தியின்
அழகிய
இமைப்பறவையின்
ஆனந்தச் சிறகடிப்பு
அதிரூபச் சிறகடிப்பு !!

-விவேக்பாரதி
04.09.2015

Comments

Popular Posts