பொன்னுத்தாயீ

மலையோரச் சாரலிலே
மாலமங்கும் வேளையிலே
சிலையாட்டம் வந்த புள்ள
எங்க போன தெரியவில்லே !

கந்தத் துணி துவைக்கையிலே
கசக்கி பிழிஞ்ச என் மனச
சந்தம் படிக்கும் குயில போலப்
பறந்த தேச புரியவில்லே !

என் மனசென்ன வெங்காயமா ?
நீ நறுக்கிற நியாயமா?
பொன்னான பொன்னுதாய்
போற வழி சொல்லமா !

தன்னால பின்னால வாரேன்
கேட்ட பொருள் எல்லாமே தாரேன்
உன்னால மண்ணாகப் போரேன்
ஒடஞ்ச கண்ணாடியா ஆரேன் !

-விவேக்பாரதி
05.02.2014

Comments

Popular Posts