ஐயோ அதிசயம்


கனவிலும் தோன்றிடும் கற்பனைக் குள்ளும்  
தினமுரு காட்டிடும் திவ்யரூ பத்தின்   
மலரடி தன்னை மனதில் நிறுத்த 
இலகுடைப் பாக்கள் இதயத் தவிழும்! 

அவற்றை அடியேன் அகமுறப் பாடி 
கவிதைத் தந்தவள் காற்கொலு சோசை 
அழகுடன் துள்ளும் அதிசயம் கண்டு  
கழலிடை கண்ணீர் கசிவேன்! - எழுப்பிடல்  

செய்வாள் உலகமா தாயே... 
ஐயோ அதைவிட அதிசயம் உளதோ??

-விவேக்பாரதி
30.04.2015

Comments

Popular Posts