காதல் சொந்தம்

விரிந்த தாமரை முத்தழகே !
அவிழ்ந்த குவளை பேச்சழகே !
எறிந்த கல்லின் சுழி அழகே
மாநிற விழி அழகே...

கல்லில் செதுக்கிய சிலை அழகே
கண்கள் கொஞ்சும் கலை அழகே
சொல்லில் உன்னால் தமிழ் அழகே
நீயே என் பேரழகே....

கார் மேகம் வானை முழுதும்
போர்த்திடும் பொன் வேளை
பார் முழுதும் இந்த வேளைக்கு
இரவு என்றே பெயராம்
அதில்
எங்கு காணினும் வட்ட வடிவில்
தங்கு தடை யற்ற நிலவு !
தங்கம் போல் அதில் மின்னுதம்மா
பொங்கும் உன் முக பொலிவு....

உந்தன் கண்களை பார்த்த பொழுதே
கவிஞனாய் நான் ஆனேன் !
எந்தன் கவிதையின் அர்த்தம் யாவும்
உந்தன் அழகென சொல்வேன்
அதன்
சந்தம் யாவும் நீயே கண்ணே
எந்தன் பந்தமும் நீயே! காதல்
சொந்தமே நீயும் நானும்
சிந்தும் முக மலர் தேனே....

-விவேக்பாரதி 
30.09.2013

Comments