சொர்க்கமா ? நரகமா ?
ஒரு நாள் இறைவன்
மேகத்தில் நின்று
நோட்டமிட்டான் புவியின் ஆட்டத்தினை !
குருவி கூவிடும் சாலைகளில்
கூச்சலிட்ட வாகனங்கள் !
பருந்து பரந்த வானத்திலே
பரவிக் கிடக்கும் புகை மாசு !
அன்னம் மிதந்த ஆறுகளில்
மிகுந்து கிடக்கும் நெகிழிக்குவியல் !
அவன் படைத்த மனிதர்களின்
ஆழ் மனதில் இன்னும் மிருகத்தனம் !
பயந்து போனான் இறைவன் தான்
சொர்கத்தினுள் ஓடிச் சென்று
சாதிக் கொண்டான் அதன் கதவை
வெளியே எழுதிவைத்தான்
இது தொடந்தால் நமக்கு
நரக வாசம் என்று !
-விவேக்பாரதி
15.11.2013
மேகத்தில் நின்று
நோட்டமிட்டான் புவியின் ஆட்டத்தினை !
குருவி கூவிடும் சாலைகளில்
கூச்சலிட்ட வாகனங்கள் !
பருந்து பரந்த வானத்திலே
பரவிக் கிடக்கும் புகை மாசு !
அன்னம் மிதந்த ஆறுகளில்
மிகுந்து கிடக்கும் நெகிழிக்குவியல் !
அவன் படைத்த மனிதர்களின்
ஆழ் மனதில் இன்னும் மிருகத்தனம் !
பயந்து போனான் இறைவன் தான்
சொர்கத்தினுள் ஓடிச் சென்று
சாதிக் கொண்டான் அதன் கதவை
வெளியே எழுதிவைத்தான்
இது தொடந்தால் நமக்கு
நரக வாசம் என்று !
-விவேக்பாரதி
15.11.2013
Comments
Post a Comment