பெண்மை
இறகை ஒத்த மனது - நன்றாய்
இனிக்கும் பேச்சும் உமது
உறவை வளர்க்கும் உள்ளம் - என்றும்
உண்மை உணர்வில் வெள்ளம் !
நேசம் விளைக்கும் அன்பு - எதிலும்
நேர்த்தி காணும் பண்பு
பாசம் ஒன்றே மூச்சு - யார்க்கும்
பணிவே உறைவாள் வீச்சு !
சேலை மூடுஞ் சோலை - ஆணைச்
சேரும் அழகு மாலை
வேலை புரியும் நங்கை - உள்ள
வேட்கை கொண்ட மங்கை !
தாயாய் வந்து தாங்கும் - அழகுத்
தாரம் மார்பில் தூங்கும்
சேயாய் பாசம் பொழியும் - இங்கே
பெண்ணால் தீமை அழியும் !
செறிவாய்ச் சமையல் செய்வாள் - கருணை
சேயிடம் மழையாய்ப் பெய்வாள் !
அறிவை வளர்க்கும் தெய்வம் - பெண்மை
அருளால் நலமாய் உய்வோம் !
நன்மை எண்ணும் நெஞ்சம் - பல
நேரம் நம்மைக் கொஞ்சும்
மென்மை பெண்ணின் உண்மை ! - சொன்ன
மேன்மை யாவும் பெண்மை !
-விவேக்பாரதி
08.03.2015
இனிக்கும் பேச்சும் உமது
உறவை வளர்க்கும் உள்ளம் - என்றும்
உண்மை உணர்வில் வெள்ளம் !
நேசம் விளைக்கும் அன்பு - எதிலும்
நேர்த்தி காணும் பண்பு
பாசம் ஒன்றே மூச்சு - யார்க்கும்
பணிவே உறைவாள் வீச்சு !
சேலை மூடுஞ் சோலை - ஆணைச்
சேரும் அழகு மாலை
வேலை புரியும் நங்கை - உள்ள
வேட்கை கொண்ட மங்கை !
தாயாய் வந்து தாங்கும் - அழகுத்
தாரம் மார்பில் தூங்கும்
சேயாய் பாசம் பொழியும் - இங்கே
பெண்ணால் தீமை அழியும் !
செறிவாய்ச் சமையல் செய்வாள் - கருணை
சேயிடம் மழையாய்ப் பெய்வாள் !
அறிவை வளர்க்கும் தெய்வம் - பெண்மை
அருளால் நலமாய் உய்வோம் !
நன்மை எண்ணும் நெஞ்சம் - பல
நேரம் நம்மைக் கொஞ்சும்
மென்மை பெண்ணின் உண்மை ! - சொன்ன
மேன்மை யாவும் பெண்மை !
-விவேக்பாரதி
08.03.2015
Comments
Post a Comment