ஒன்றில் இரண்டு

(ஒரு ஆசானுக்கும் மாணவனுக்கும் நடக்கும் பேச்சு....)

வினாவுத்தரம்

எதுதான் உலகில் எமதோ பிறர்க்கும் 
எதைநான் தரவோ கொடுக்க ?  - மதியும்
பொதுவாம்  நலமும் பொலிவும் உளதே !
எதுவோ பொதுவோ கொடு !

மாணவனின் வினா :

எதுதான் எமதோ எதைநான் கொடுக்க
பொதுவாம் பொலிவும் எது ?

ஆசானின் பதில் :

உலகில் பிறர்க்குத் தரவோ மதியும்
நலமும் உளதே பொது !


(ஒரே வெண்பாவை எழுதி அதிலே ஒற்றைப்படைச் சீர்களைச் சேர்த்தால் ஒரு குறள் வெண்பாவாகவும் இரட்டைப்படைச் சீர்களைச் சேர்த்தால் மற்றொரு குறள் வெண்பாவாகவும் எஞ்சும் சீரை விளியாகவும் வைத்துப் பாடுவது "ஒன்றில் இரண்டு")

-விவேக்பாரதி
11.08.2015

Comments

Popular Posts