(பேர்)ஆசை

ஒன்றாய் வாழ்ந்திட ஆசை !
இரண்டாம் உலகம் காண ஆசை !
மூன்றாம் கண் திறக்க ஆசை !
நான்காம் வேந்தனாக ஆசை !
ஐந்தாம் வேதம் செய்ய ஆசை !
ஆறாம் புலன் வளர்க்க ஆசை !
ஏழாம் சுவை உணர ஆசை !
எட்டாம் ஸ்வரம் பாட ஆசை !
ஒன்பதாம் திசை செல்ல ஆசை !
பத்தாம் கிரகம் பெயர ஆசை !!

-விவேக்பாரதி
24.05.2013

Comments

Popular posts from this blog

மரகதப் பஞ்சகம்

கவிதை ஆண்டாள் - 1

மாதங்களில் அவள் மார்கழி