குழந்தைப் பாடல் - மிதிவண்டி

தன்னானே தானனன்னே
காலைத்தூக்கி மேலேபோட்டு
முன்னாலே பார்த்தபடி
இருக்கையிலே அமர்ந்துகிட்டு

தில்லானே தில்லானனே
கீழேமிதி மேலேமிதி
நில்லாமல் ஓட்டிப்பாரு
மிதிவண்டிக் கிதுவே விதி

இடதுபுறம் செல்லவேணும்
இல்லையெனில் துன்பம்நேரும்
கடகடவென வேகமாக
ஓட்டுவதை நிறுத்தவேணும்

மிதிவண்டி மிதிவண்டி
இன்றைக்கேற்ற மிதிவண்டி
எதுவுண்டு இதுபோலே
இதுவேதான் நிதிவண்டி !


-விவேக்பாரதி
25.04.2015

Comments

பிரபலமான பதிவுகள்