நெஞ்சு பொறுக்க

நெஞ்சு பொறுத்திட மாட்டோம்
இந்த நிலை கேட்ட மனிதரை நினைத்துவிட்டால் !

பிஞ்சுக் கரங்களையும்
வேலைக்கு பிடித்து இழுத்திடும்
வழக்கத்தினை செய்யும்
வஞ்சனை மூடர்களும் நல்ல
வேடத்தினை அணிந்தும்
மனதளவில் நஞ்சை விளைத்து
நாட்டுக்கெல்லாம் நாசம் விளைத்திடும்
வீணர்களும் ,
செஞ்சுவை மிக்க கவி மக்கள்
நம்மிடம் சிக்க முற்பட்டால்,

பஞ்சு பறப்பதைப் போல் கிழிந்து
பறக்க விடப் படுவர் என்பதனை
அஞ்சா நெஞ்சருளும் அன்னையவள்
ஆதி பராசக்தி மேல் ஆணையிடுவோம் !

துஞ்சோம் இனி ஒருநாளும் இந்த
துச்சாதனன்கள் மறையும் முன்னே !

சமூகத்தின் மேலே பற்று கொண்டு
எடுப்போம் இனிமேல் உறுதிமொழி
பண்டிகைகளில்
ஏழை குழந்தைகளுக்கு உணவளிப்போம்
குழந்தை தொழில்நீங்க இதுவே இறுதிவழி

-விவேக்பாரதி
25.12.2013

Comments

Popular Posts