நாங்கள் கவிஞர்கள்

நாங்கள் கவிஞர்கள் ! நாவாடும் வார்த்தைகள்
மாங்கனி யாக மலருமே ! - தீங்கவிதை
செய்வோமே யாங்கணும் சேர்ந்து !

கண்ணில் கவினழகை கண்டிட்டால் யாமுடனே
பண்ணில் இசைத்துப் படைப்போமே ! - மண்ணில்
கனலாய் உதிர்ப்போம் கவி !

தீயாக எம்கவிதை திக்கெட்டும் தான்பரவும்
காயாகும் அஃதே கயவர்க்கு - நோயான
மானிடர்க் கிஃதே மருந்து !


-விவேக்பாரதி
08.09.2015

Comments

Popular Posts