சிலேடை - பாவும் பெண்ணும்

நாவலரும் போற்றுதால் நான்கு குணமுளதால்
பாவலரும் பண்ணிசைத்துப் பாடுவதால் - காவலரைச்
சேர்க்கும் அழகதுவால் செந்தமிழின் பாக்களும்
நேரிழையும் நேருக்கு நேர் !


பா :


1) நாவில் சிறந்தவர்கள் போற்றுவார்கள்
2) நான்கு வகையான குணங்கள் (வடிவங்களும் ஓசைகளும்) கொண்டன.
3) பாவலர்கள் பண் அமைத்துப் பாவைப் பாடுவார்கள்.
4) காவலர்கள் (அரசர்கள்) பாக்களில் புனைப்படும் அழகால் சேர்வர் (சிலப்பதிகாரத்தில் மூவேந்தர்களும் இளங்கோவின் பாவால் சேர்ந்தனர்)

பெண் :

1) நாவில் சிறந்தவர்கள் போற்றுவார்கள்.
2) அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என்று நான்கு குணமுடையவர்கள்.
3) பாவலர்கள் பெண்களைப் பண் கொண்டு பாடிப் புகழ்வர்.
4) காவலர் ( கா + அலர்) காட்டு மலர்களைச் சேர்த்துக் கட்டும் அழகினைக் கொண்டவர்கள்.

-விவேக்பாரதி
04.04.2015

Comments

Popular Posts