லிமரைக்கூ

காற்று

எத்தனைநாள் சுற்றுதுவோ காற்று
ஏறுதுவே இன்றுநாளை நேற்று
   யாரனுப்பி வைத்தாரோ
   யாரிதனைத் தைத்தாரோ
ஏதிதற்கு ஆகிடுமோ மாற்று !

நிலா

முத்துமுத்தாய் பூத்திருக்கு வானம்
முழுமைநிலா மறைவதிலேன் நாணம்
   பாதியிலே தேய்கிறது
   பாதிதலை சாய்கிறது
மூழ்விட்டேன் இதனழகில் நானும் !

கடல்

அலையோசை காதுகளில் இசையே
அலைவதெலாம் காற்றடிக்கும் விசையே
   யாரிதனை சிந்திட்டார்
   யாழிசைக்க முந்திட்டார்
அலைகடலே இங்கெட்டுத் திசையே !

-விவேக்பாரதி
03.07.2015

Comments

Popular Posts