இன்றோடு

இன்றோடு என்ஜீவன் முடிகிறது
நாளை முதல் எனக்கு மறுபிறப்பு

இன்றோடு என்னாவி திரிகிறது
நாளை முதல் எனக்கு சொர்கவாசம்

இன்றோடு என்தேடல் ஓய்கிறது
நாளை முதல் எனக்கு இறைவனடி

இன்றோடு என்னிளமை சாகிறது
நாளை முதல் எனக்கு சிசு உருவம்

என்றேதான் சொன்னபடி வீழ்கிறதோ
எப்போதும் சிரிக்கின்ற மலரினங்கள் ?

-விவேக்பாரதி
 31.08.2014

Comments

Popular Posts