இரவு மாது

கற்பனை ஆடும் களத்தினைப் போலவள்
அற்புதம் காட்டிடும் போது!இன்பம் - விற்பனை
வைத்திடும் வீதியைப் போலவள் தூங்கவும்
வைத்திடு வாளிரவு மாது !

கனவினை வாழ்வில் புகுத்திடு வாள்!நம்
மனமெல்ல சாய்ந்திடும் போது  - தனது
நிலவொளி ஒன்றால் உலகினைக் காட்டும்
இலகுடை யாளிரவு மாது !

விவேக்பாரதி
21.04.2014

Comments

Popular Posts