காமராசு நான்மணி மாலை
வெண்பா
பெருந்தலைவன் காமராசு ஊற்றெடுத்த நல்லூர்
விருதுநக ரென்ப தறிவீர் - கருநிறத்துக்
காந்திய வாதிபுகழ் தான்பாட வந்தேன்நான்
மாந்தனிவன் மானிடக் கோ !
அகவல்
கோட்டை யிலேறினும் தன்கால் கீழென்று
நாட்டம் மிகுச்சொல் சொல்லிடும் மாமனிதன்
அரசிய லில்புகுந்து நாட்டுக் கேபல
அறச்செயல் செய்திடும் அரசின் ராசா
தனக்கென ஏதும் நாடா
மனங்கொண் டோந்தான் நமது மன்னனே !
கலி விருத்தம்
மன்ன வன்இவன் ஆட்சியின் கீழ்புவி
இன்ன லைமறந் தின்பமாய் வாழ்ந்ததே
துன்பந் தீண்டிடா வாழுதற்க்(கு) கல்வியின்
பொன்னி னையடந் தாடிம கிழ்ந்ததே !
அறுசீர் விருத்தம்
மகிழ்ந்ததேநம் நாடு இந்த
மாமனிதன் வருகை யாலே
முகிழ்ந்ததோர் பூவாய் மக்கள்
முழுமைமி(கு) கல்வி பெற்று
திகழ்ந்தனரே வானத் தேவர்
போலேதான் ! இவனை யாரும்
அகமிதிலே படிப்பில் லோனென்
றியம்பிடலும் சாத்திய மோசொல்!
-விவேக்பாரதி
பெருந்தலைவன் காமராசு ஊற்றெடுத்த நல்லூர்
விருதுநக ரென்ப தறிவீர் - கருநிறத்துக்
காந்திய வாதிபுகழ் தான்பாட வந்தேன்நான்
மாந்தனிவன் மானிடக் கோ !
அகவல்
கோட்டை யிலேறினும் தன்கால் கீழென்று
நாட்டம் மிகுச்சொல் சொல்லிடும் மாமனிதன்
அரசிய லில்புகுந்து நாட்டுக் கேபல
அறச்செயல் செய்திடும் அரசின் ராசா
தனக்கென ஏதும் நாடா
மனங்கொண் டோந்தான் நமது மன்னனே !
கலி விருத்தம்
மன்ன வன்இவன் ஆட்சியின் கீழ்புவி
இன்ன லைமறந் தின்பமாய் வாழ்ந்ததே
துன்பந் தீண்டிடா வாழுதற்க்(கு) கல்வியின்
பொன்னி னையடந் தாடிம கிழ்ந்ததே !
அறுசீர் விருத்தம்
மகிழ்ந்ததேநம் நாடு இந்த
மாமனிதன் வருகை யாலே
முகிழ்ந்ததோர் பூவாய் மக்கள்
முழுமைமி(கு) கல்வி பெற்று
திகழ்ந்தனரே வானத் தேவர்
போலேதான் ! இவனை யாரும்
அகமிதிலே படிப்பில் லோனென்
றியம்பிடலும் சாத்திய மோசொல்!
-விவேக்பாரதி
15.07.2014
Comments
Post a Comment