ஆசுகவி - எழுத்து இழுக்கு

"எழுதிக் கொடுத்திட்ட ஏற்றமிகு பாட்டில்
பழுத்தென்ன?" என்றார் பகவான் - "பழுதெல்லாம்
சொல்பொருளில் உண்டெ"ன்றான் ! சொல்லிலே நக்கீரன்
"இல்லை"யென் றானே 'இழுக்கு' !


(முதுபெரும் புலவர் தங்க ஆறுமுகம் ஐயா கொடுத்த குறிப்புக்கு 2 நிமிடங்களில் அடியேன் எழுதிக் கொடுத்த முதல் ஆசுகவி.)


-விவேக்பாரதி
31.01.2015


Comments

Popular Posts