வாய்மொழி வெண்பா

சின்னக் கிளியே உன்னநான் கண்டாலே
என்ன மறந்தே செக்குமாடு போலவே
தன்னால சுத்துறேன் தாகத்தால் கத்துறேன்
சொன்னாலே போதுமொரு சொல் !
 *
புத்தம் புதுபூமி புண்ணியம் தான்சாமி
நித்தமும் தாலாட்டும் பூங்காத்து - சித்திரம்போல்
முத்துமுத்தா பூக்குற காடுமல நந்தவனம்
அத்தனையும் சக்திநீ தா !
*
ரேசன் கடையிலும் கூட்டமே ! நோயுற்ற
பேசன்ட்டைப் பார்க்கவும் கூட்டமே - சேசன்மேல்
நின்றாடும் கண்ணனை நீலகண்ட ஈசனைச்
சென்றுதொழும் போதும் அதே ! 

-விவேக்பாரதி

Comments

Popular Posts