மன்மத வருஷ பலன் வெண்பா

மாரி பொழியுமாம் மாமன்னர் சீனத்தைப்
போரில் எதிரே பொருதுவராம் - சீரியதாய்க்
காற்றும் மிகுந்திடுமாம் கண்டுலகம் கொண்டாட
ஏற்றிவந்தார் மன்மதம் என்று !

நன்மைமிகு பல்பொருளும் நண்ணிடுமாம் ஊரினிலிம்
மன்மதத்தில் பல்லுயிரும் இன்புறுமாம் - தென்திசையில்
காற்றும் மிகுந்திடுமாம் கண்டுலகம் கொண்டாட
ஏற்றிவந்தார் மன்மதம் என்று !

-விவேக்பாரதி
14.04.2015

Comments

Popular Posts