புருவத்தின் அதிசயம்

வானத்தில் ஆடுகின்ற
மன்மதனும் தன்கையால்
வளைத்தே மண்ணில்
எய்யுகிறான் அம்புகளை 1
உண்மையில் அவன் வளைத்த
வில்லைதான் தன் கண்ணில்
புருவுமாய்க் கொண்டாளோ ?
பூலோக ரதியவளும் - இல்லை
வண்ணம் எழுதனைக்
கடத்தித் தன்மேலே
கொண்ட அந்த வானவில் தான்
புருவங்களை வந்தனவோ ?
அவள் புருவம் கண்டுவிட்டால்
கவிதை மழை போழிவதனை
எப்படி உரைப்பேன் நான்
உறைந்து நிற்க மாட்டேனோ ?

-விவேக்பாரதி
24.04.2014

Comments

Popular Posts