புட்களுக்கு அழைப்பு

வானில் பறக்கின்ற கிள்ளையே என்னவளைக்
காணில் எனதுகாதல் சொல் !

தூரத்து மாங்கனி கொத்தும் கிளியேசொல்
சேரன் மகளின் சிறப்பு !

கானகத் தாடும் மயிலேஎன் காதல்சொல்
வானகத் தாடிநீ சென்று !

மலையோரம் பாடும் குயிலினமே தங்கச்
சிலைபதுமை என்னவளைப் பாடு !

வானத்தை ஆளும் கழுகேநீ என்காதல்
மானையும் கண்டால் துதி !

விவேக்பாரதி
24.04.2014

Comments

Popular Posts