காய்ச்சீர் வெண்பா

செந்தமிழே! செந்தமிழே! சிந்தமுதம் சந்தமுறச்
சிந்தனையில் சிந்துதுளி சந்தனமாய்ச் - சுந்தரமாய்ச்
சந்ததிகள் சந்திக்கச் சிந்திக்கச் சிந்துவெனச்
சந்தோஷச் சந்திமழை சிந்து!
*
கற்றதனால் சொற்பதங்கள் அற்புதமாய்ச் சுற்றுகிறேன்
சிற்றளவும் தற்புகழில் பற்றுமிலை - கற்பகத்தாள்
பொற்பதத்தை முற்பொழுதும் பற்றுகிறேன்! நற்றுணையாய்த்
கற்றவர்கள் நிற்பதனைப் பெற்று!

(இவை இரண்டும் "முற்று முடுகு" வெண்பாக்கள்)

-விவேக்பாரதி
09.10.2014

Comments

Popular Posts