குடியரசு தின வாழ்த்து

இந்தியா உன்றனுக்கென் இன்னாளின் வாழ்த்துக்கள்
தந்திடவே எண்ணித் தமிழ்சொன்னேன் - செந்தேன்
கவிகேட்டுக் கண்ணே களிப்பாய் ! பின்பு
புவிபார்க்க நன்றாய் மலர் !

குடியரசு நாளில் குணமுயர ! நாட்டின்
மிடிமைகள் நீங்கி மிளிர - வடிவுடனே
நல்வாழ்த் துரைக்கின்றேன் நாடே உனக்குள்ளே
கொல்வாய் பிழைகள் கொதித்து !

வந்த செயல்மறந்து வாழ்வோரின் வாழ்வுதனை
நொந்து கடிந்து நூதனமாய் - இந்தியா !
பாரெல்லாம் நற்கீர்த்தி பெற்றிடவே நீயுழைப்பாய்
ஊரெல்லாம் ஒன்றென ஓர்ந்து !

-விவேக்பாரதி !
26.01.2016

Comments

Popular Posts