காதலிக்கு

கார் குழலே
கருமை நீர் குழலே
உன்னைக் கண்டதும்
மயங்கி விட்டேன் !

பாதவொலி
பாரி ஜாதவொலி
அதைக் கேட்டதும்
உயிர் கசிந்தேன் !

அந்தக் காற்று வழி
வந்தக் கவிதை மொழி
சந்தம் கேட்டதும்
மாய்ந்து விட்டேன் !

தங்கத்தினால் செய்த
உன் இடையில்
சங்கத் தமிழை நான் 
பயின்று கொண்டேன்!

மங்கா நிலவே
உன் மந்திர சிரிப்பினில்
தூங்காது நான்
கண் விழித்தேன்!

பூந்தொட்டிலில்
உன்னை உறங்க வைத்து
தங்கத் தாலாட்டுப் பாட்டிசைப்பேன் !
கூந்தலைக் கோதியே
சிடுக் கெடுத்து
அதை சொர்கத்தின் வேர்கள் என்பேன் !

மாந்தொப்பினிலே
ஒரு மல்லிகை வளர்த்து
பாதத்தில் தூவிடுவேன் !

உன்
காந்தப் பார்வை
ஒன்றினிலே நான்
உண்மையில் உயிர் துறப்பேன் !

விவேக்பாரதி
16.01.2014

Comments

Popular posts from this blog

மரகதப் பஞ்சகம்

கவிதை ஆண்டாள் - 1

மாதங்களில் அவள் மார்கழி