கவியரசு கண்ணதாசன்

முத்தையா என்னும் முதுதமிழ்ப் பாராசன்
தித்திக்கும் பாடல் திரையிசையில் ! காவியமும்
சத்தாய்ச் சொலும்புலமைச் சான்று !

ஏசுகா வியஞ்சொன்ன ஏற்றத்தான் ! ஞானப்பா
வீசுகின்ற செந்தமிழ் விசையேகாண் ! வையகமே
பேசு மிவனைப் புகழ்ந்து !

அர்த்தமுள்ள இந்துமதம் ஆகிடுமே நற்சாட்சி
சுத்தமுள்ள நெஞ்சன் ! சுடர்தமிழ்ப் பாபாடி
இத்தரணி ஈர்த்தா னிவன் !

-விவேக்பாரதி !
28.04.2016

Comments

Popular Posts