குழந்தைப் பாடல் - வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய் வெள்ளரிக்காய்
வெயிலுக்கேற்ற வெள்ளரிக்காய்
வேனிலுக்கு ஏற்றதடா
வேலியிலே பூத்ததடா !

குளிர்பானம் உண்ணாதே
குளிர்பனிக்கூழ் எண்ணாதே
தளிர்வெள்ளரி சாப்பிடுவாய்
இன்னுங்கொஞ்சம் கேட்டிடுவாய் !

இயற்கையிலே காய்த்ததடா
இன்னல்தீர்க்கக் காய்த்ததடா
செயற்கைக்கூழ் ஏதுக்கடா
இயற்கைத்தாய் வரமிருக்க

-விவேக்பாரதி
26.04.2015
 

Comments

Popular Posts