முயற்சி
காட்டுக் குயிலின் பாட்டும் கூடக்
கடின முயற்சியின் தூண்களடா !
வீட்டுக் கோழி கூவிப் பொழுது
விடியும் கற்பனை வீண்களடா !
கோட்டை பிடித்துக் கொடிகள் வைக்கக்
கோபுரம் போலே முயற்சி எடு
நாட்டம் எதிலும் செலுத்த வேண்டாம்
நன்றாய் நீயும் முயற்சி எடு
காட்டை அழிக்க ஆயிர மாயிரம்
கரங்கள் ஒன்றாய் சேர்கையிலே
வாட்டம் போக்க வந்திடும் மழைபோல்
வாழ்வைக் காக்க முயற்சி எடு !!
-விவேக்பாரதி
05.02.2014
கடின முயற்சியின் தூண்களடா !
வீட்டுக் கோழி கூவிப் பொழுது
விடியும் கற்பனை வீண்களடா !
கோட்டை பிடித்துக் கொடிகள் வைக்கக்
கோபுரம் போலே முயற்சி எடு
நாட்டம் எதிலும் செலுத்த வேண்டாம்
நன்றாய் நீயும் முயற்சி எடு
காட்டை அழிக்க ஆயிர மாயிரம்
கரங்கள் ஒன்றாய் சேர்கையிலே
வாட்டம் போக்க வந்திடும் மழைபோல்
வாழ்வைக் காக்க முயற்சி எடு !!
-விவேக்பாரதி
05.02.2014
Comments
Post a Comment