காக்கையும் நாமும்

பாக்கள் புனைவேன் நம்நாட்டு மக்களும்
காக்கைக் கூட்டம் என்றே சொல்வேன்
பறவை இனத்தில் காக்கை போல
திறமை மிகுந்த பறவை யில்லை
உலகம் எங்கும் நிறைந் திருக்கும்
விலகா சுருதியில் தனித்து கரையும்
கூட்ட மாகத்தான் ஊரைச் சுற்றும்
கூட்டுக் காகத்தான் உழைத்தே சுற்றும்
மற்றும் அவைக்கு எதுகிடைத் தாலும்
ஒற்றுமை யுடனே பங்கிட்டுத் திண்ணும்
ஒன்றுக் கேதும் ஆனால் மற்றவை
நின்று அதற்கு உதவியும் புரியும்
மஞ்சள் வானம் வரையில் பறக்கும்
குஞ்சுக் கிரையைக் கொண்டு குவிக்கும்
கருநிறம் கொண்டாலும் மனதோ வெள்ளை
வருகின்ற உணவை தனித்துண் பதில்லை
காற்றே கேளாய் ! கடலே கேளாய் !
ஆற்றில் ஆடும் மீனே கேளாய்
மலையே கேளாய் ! மலரே கேளாய் !
நிலையான ஒற்றுமை யுணர்வு
மறையாக் காக்கையும் நாமும் ஒன்றே

விவேக்பாரதி
09.05.2014

Comments

Popular Posts