இனி சாகாது தமிழ்
வான்வரை உயர்ந்து
வளர்ந்தத் தமிழை மேலும்
வளரச் செய்ய
வந்து விட்டோம் நாங்கள் !!
ஆங்கிலப் பயிற்சியினால்
ஆங்காங்கே பெயருகின்ற
ஆயத்த இளைஞர்கள் ஓர்
ஆயிரம் பேர் இருந்தாலும்
ஆர்வம் கொண்டு தமிழையும்
அள்ளி எடுத்து எழுத்தில் தொடுத்து
அதில் கவிதை வடிப்போம்
வாழும் இனி என்றும்
சாகாது முத்தமிழ் !
குருவிகள்
குறள் சொல்லும் !
பருத்திப் பூ
பா இசைக்கும் !
காக்கைகள்
கவி பாடும் !
மனிதர் எல்லாம்
மன்னர் ஆவர் ! உலகினை
மாற்றிடுவோம் எங்கள்
பாட்டினிலே !
கன்னித் தமிழைத் தான்
கணினியில் தட்டச்சிடுவோம் !
கந்தலே உடுப்பினும்
கம்ப்யூட்டரில் கவி செய்வோம் !
புதுக் கவிதைகள்
புனைதிடுவோம் தமிழ்
பூ தாங்கும் காம்பு நாங்கள்!
அன்னையின் தமிழ்ப்பாலை சுவைக்கும்
அழகியதொரு பிள்ளைக் கூட்டம் !
அமுதமாகிய தமிழை நாங்கள்
ஆன்லைனில் படித்திடுவோம் !
என்னில் அடங்கா
எண்ணங்களை
எந்நேரமும்
எழுத்தில் அச்சிடும்
எழில் உடைய கவிஞர் கூட்டம் !
எங்கள் வாழ்வே தமிழ் ஓட்டம் !
-விவேக்பாரதி
01.11.2013
வளர்ந்தத் தமிழை மேலும்
வளரச் செய்ய
வந்து விட்டோம் நாங்கள் !!
ஆங்கிலப் பயிற்சியினால்
ஆங்காங்கே பெயருகின்ற
ஆயத்த இளைஞர்கள் ஓர்
ஆயிரம் பேர் இருந்தாலும்
ஆர்வம் கொண்டு தமிழையும்
அள்ளி எடுத்து எழுத்தில் தொடுத்து
அதில் கவிதை வடிப்போம்
வாழும் இனி என்றும்
சாகாது முத்தமிழ் !
குருவிகள்
குறள் சொல்லும் !
பருத்திப் பூ
பா இசைக்கும் !
காக்கைகள்
கவி பாடும் !
மனிதர் எல்லாம்
மன்னர் ஆவர் ! உலகினை
மாற்றிடுவோம் எங்கள்
பாட்டினிலே !
கன்னித் தமிழைத் தான்
கணினியில் தட்டச்சிடுவோம் !
கந்தலே உடுப்பினும்
கம்ப்யூட்டரில் கவி செய்வோம் !
புதுக் கவிதைகள்
புனைதிடுவோம் தமிழ்
பூ தாங்கும் காம்பு நாங்கள்!
அன்னையின் தமிழ்ப்பாலை சுவைக்கும்
அழகியதொரு பிள்ளைக் கூட்டம் !
அமுதமாகிய தமிழை நாங்கள்
ஆன்லைனில் படித்திடுவோம் !
என்னில் அடங்கா
எண்ணங்களை
எந்நேரமும்
எழுத்தில் அச்சிடும்
எழில் உடைய கவிஞர் கூட்டம் !
எங்கள் வாழ்வே தமிழ் ஓட்டம் !
-விவேக்பாரதி
01.11.2013
Comments
Post a Comment