சக்தி விருத்தம்

திங்கள் சடையன் பத்தினியைத்
   திண்தோள் கந்தன் தாயவளை
எங்கள் துயரம் தீர்ப்பவளை
   என்றும் எம்மைக் காப்பவளை
மங்காச் சோதிப் பொருளவளை
   மாயன் தங்கை மதிநுதலை
எங்கும் எதிலும் எப்பொழுதும்
   ஏத்தித் தொழுவோம் உயர்வுருவோம் !

-விவேக்பாரதி
03.06.2015

Comments

Popular Posts