நீர் சேமிக்க


நீர்சே மிக்கக் காரணங் கேட்கின்
பாரென் இளையோய் ! பாரினுக் குள்ளே !
தண்ணீ ரைநாம் விலைக்குப் பெறுகிறோம் !
மண்ணின் நீரை மாசுடன் கலந்தோம் !
பயிரை வளர்க்கப் பயிர்தரு முணவால்
உயிரை வளர்த்து உய்வதற் காக
விலையில் நீரை விரைவில் நாமும்
தலைக்கட னாகச் சேமித்திட வேண்டும் !
வீடு கட்டவும் ! வியனுல கிஃதில்
காடு வளர்க்கவும் ! கனிகள் செய்யவும் !
தொண்டைக் குழியிலே தோன்றிடுந் தாகம்
தண்ணீ ரமுதால் தணியக் காணவும்
சேமிக்க வேண்டும் நீரை
பூமியைக் காக்க இதுபுரி வோமே !

-விவேக்பாரதி
26.02.2015

Comments

Popular Posts