நெகிழி தவிர்ப்போம்

நெகிழிசெய் பைகளை பயன்படுத்தா விட்டால்
மகிழ்வாக வாழலாம் நாமும் - சகமிதில்
மாசைக் குறைத்து உலகம் இனிமைபெற
ஆசைகொண் டேவடித்தேன் பா !

பாரிலே நெகிழி தனையும் தவிர்த்தாலே
மாரிகூட தேனாய்ப் பொழியுமே - காரிகையாம்
அன்னை நிலத்தாய் செழிப்புடன் வாழுதற்கு
இன்னல் தரும்நெகிழி நீக்கு !

நீக்கினாலும் போக்கினாலும் மாளா அரக்கனிவன்
தீக்கிரையாய் ஆக்கினாலும் தீதாவான் - தூக்கியே
தூரம் எறிந்தாலும் மக்காமல் நின்றிடுவான்
பாரமிவன் நம்முலகுக் கே !

-விவேக்பாரதி
06.06.2014

Comments

Popular Posts