காகிதக் கப்பல்கள்


குடங்குடமாய் இருந்தும்
குடிக்க முடியவில்லை
குவியும் மழைநீர் !
*
மழைக்கால மீட்பு
விடுமுறை கொண்டாடும் குழந்தைகளின்
காகிதக் கப்பல்கள் !
*
தனிமை நிரப்பிய இடத்தை
நிரப்பியது தண்ணீர்
தண்டவாளங்களுக்கு இடையில் !
*
அடித்துச் செல்லும் வெள்ளத்தின்
அழகாய் அமைந்தது
அமைதியான சுழல் !


(சென்னையில் பெருமழை வந்தது கண்டு எழுதியவை)

-விவேக்பாரதி
02.12.2015

Comments

Popular Posts