ரோசாப்பூ

சின்னப் பட்டுபூ
சிங்கார மொட்டுப்பூ
முள் இருக்கும் பூ அழகு
உள்ளிருக்கும் தேன் அழகு
மல்லிகைக்கு தங்கை தான்
அல்லி மலரின் அக்காளாம்
எனதருமை காதலியின்
மனதனைத்த மதுரப்பூ
பன்னீர் எடுக்கும் பூ
கன்னி சூடும் ரோசாப்பூ !!

-விவேக்பாரதி
17.11.2013

Comments

Popular posts from this blog

மரகதப் பஞ்சகம்

மாதங்களில் அவள் மார்கழி

கவிதை ஆண்டாள் - 1