வீரத்தமிழ்

உதிரத்தில் அன்னை தமிழேதான் வற்றா
நதியினைப் போலவே பாயுமே ! உச்சரிப்பில்
கொஞ்சிவிளை யாடுமே ! சிந்துகவி பாடுமே !
செஞ்சுவையின் ஊற்றாய்ப் பெருகுமே ! உற்சாகச்
சிங்கநடை போடுமே ! வென்றும் உயருமே !
மங்காத வாகையும் சூடுமே ! பூரித்துப்
பொங்குமே ! வாழும் உரிமையாய் ஆகுமே !
எங்கும் புரட்சி புரியுமே ! வீழும்
அருவியாய் ஊறுமே ! முட்டும் சிகரம்
உருவாய் எட்டுமே ! உள்ளம் முழுதும்
நிறையுமே ! தாயாய்த் தாங்கி உடலில்
உறையுமே வீரத் தமிழ் !

-விவேக்பாரதி
13.03.2014

Comments

Popular Posts