கலைமகள் (எ) சாவோ ஜியாங்

சீனத்துச் செந்தமிழ்த் தேன்
சீரிடும் தமிழ் அமுதால்
வானத்தைக் கடந்து நின்று
வாழ்கிறாள் பூமிக் குள்ளே !
அலைகடல் ஏழ் கடந்து
அன்புத் தமிழ் பயின்று
கலைமகள் எனப் பெயரைக்
கன்னித் தமிழாக்கிக் கொண்டாள் !
வானொலித் தமிழ்த் துறையில்
பனி யாற்றிடும் பாவையவள்
மானோளிப் போல் விழியால்
மங்காத் தமிழ் பேசிடுவாள் !
சீனம் முழுவதும் தமிழை
சிறக்க வைக்கும் பெண்ணவளை
நான்எனை மறந்து நின்று
நாவாரப் போற்றுகிறேன் !
வானத்தைக் கடந்து நின்று
வாழ்கிறாள் பூமிக் குள்ளே !
அலைகடல் ஏழ் கடந்து
அன்புத் தமிழ் பயின்று
கலைமகள் எனப் பெயரைக்
கன்னித் தமிழாக்கிக் கொண்டாள் !
வானொலித் தமிழ்த் துறையில்
பனி யாற்றிடும் பாவையவள்
மானோளிப் போல் விழியால்
மங்காத் தமிழ் பேசிடுவாள் !
சீனம் முழுவதும் தமிழை
சிறக்க வைக்கும் பெண்ணவளை
நான்எனை மறந்து நின்று
நாவாரப் போற்றுகிறேன் !
(சீனப் பெண் சாவோ ஜியாங் என்பவர் தமிழகம் வந்து தமிழ் பயின்று நூல் எழுதிய செய்தி கேட்டு எழுதியது)
-விவேக்பாரதி
18.01.2014
Comments
Post a Comment