பெண் மயிலே
பெண் மயிலே என்னைத் தவிர்த்து
செல்வாயோ இதயம் உடைத்து
உண்மையிலே உனது நினைவால்
உறக்கங்கள் தொலைகிறேன்
கண்ணிமையின் நீரைத் துடைத்து
அழாமல் நடிக்கிறேன் !
அந்த நாளில் கனாக்களில்
உன்னிடம் நான் ! என்னிடம் நீ !
இந்த நாள் அதை வினாவினால்
நாம் விடையா ? விடுகதையா ?
எந்தன் கண்களின் பிம்பமெல்லாம்
உன் முகமே ! உன் முகமே !
அதை மறந்திடத் தேவையடி
என் கண்ணுக்கு ஒரு யுகமே !
கடைவிழியில் உன்னை அடித்தேன்
கண்ணீர் வழி நழுவி நீ
நகர்ந்திட்டாய் !
தனிச் சாலையில் உலாவினோம்
ஒருமுனை நான் ! மறுமுனை நீ !
அந்தத் தருணம் கனாவிலும்
இனிவருமா ? இனித்திடுமா ?
மயிர் நுழைந்திடும் சிறு தொலைவு
நமக்குள்ளே அன்று இல்லையே
உயிர் உடைந்திட பெருந் தொலைவு
வந்ததிங்கு யார் பிழையா ?
பெண்மயிலே உன்னை அழைக்கக்
காகிதம் வழிக் கவிதைகள்
தூதுவிட்டேன் !
-விவேக்பாரதி
16.07.2014
செல்வாயோ இதயம் உடைத்து
உண்மையிலே உனது நினைவால்
உறக்கங்கள் தொலைகிறேன்
கண்ணிமையின் நீரைத் துடைத்து
அழாமல் நடிக்கிறேன் !
அந்த நாளில் கனாக்களில்
உன்னிடம் நான் ! என்னிடம் நீ !
இந்த நாள் அதை வினாவினால்
நாம் விடையா ? விடுகதையா ?
எந்தன் கண்களின் பிம்பமெல்லாம்
உன் முகமே ! உன் முகமே !
அதை மறந்திடத் தேவையடி
என் கண்ணுக்கு ஒரு யுகமே !
கடைவிழியில் உன்னை அடித்தேன்
கண்ணீர் வழி நழுவி நீ
நகர்ந்திட்டாய் !
தனிச் சாலையில் உலாவினோம்
ஒருமுனை நான் ! மறுமுனை நீ !
அந்தத் தருணம் கனாவிலும்
இனிவருமா ? இனித்திடுமா ?
மயிர் நுழைந்திடும் சிறு தொலைவு
நமக்குள்ளே அன்று இல்லையே
உயிர் உடைந்திட பெருந் தொலைவு
வந்ததிங்கு யார் பிழையா ?
பெண்மயிலே உன்னை அழைக்கக்
காகிதம் வழிக் கவிதைகள்
தூதுவிட்டேன் !
-விவேக்பாரதி
16.07.2014
Comments
Post a Comment