காணி நிலம்


காணி நிலம் வேண்டும் - பராசக்தி
   கட்டிடங்கள் இட்டு விற்பதற் கில்லை
தேனியைப் போல நிதம்  - உழைத்து
   தெள்ளு நெற்கதிர் விளைப்பதற்கே !

மானிட ஜாதிப்பசி - நீங்கி
   மடமை பொறாமை அழிவதற்கே !
தானியம் மன்னுதற்கே - சக்தி
   தாயே வேண்டுதும் காணி நிலம் !!

தட்டிப் பறித்தலில்லா - நிலத்தைத்
   தாசில் தாரவர் முன்னிலையில்
பட்டாப் போட்டுநீ தா - பராசக்தி
   பாரதத் தேவியின் கைகளிலே !

கட்டிபொன் செய்திடுவோம் - எங்கும்
   கனிவகை கொஞ்சிடச் செய்திடுவோம் !
சட்டங்கள் வேதமெல்லாம் - யாரும்
   சமமெனச் சொல்லிட ஆண்டிடுவோம் !

-விவேக்பாரதி
23.12.2013

Comments

Popular Posts