தேர்தல் தனிப்பாக்கள்

சாக்குபோக்கு சொல்லியே காலம் கழிக்காதே !
காக்கும் பணி உனதேதான் - தேக்கிவைத்த
ஏக்கங்கள் தீர்வதற்கே தேர்தலும் வந்ததே
வாக்குதான் உன்னுரிமை பார் !
 *
கூட்டம் அமைப்பான் கொடிகளும் நட்டுவைப்பான்
பாட்டைப்பொல் இன்சொற்கள் பேசிடுவான் - நாட்டையும்
ஏற்றியே பீடத்தில் வைப்பவனைத் தேர்ந்தெடு
மாற்றம் நமதுகைக ளில் 
*
தேர்தல் பொழுதில் இருட்டில் திருட்டை!நாம்
பார்த்திட வேண்டுமே என்பதற்காய் - கூர்வாள்போல்
மின்னலை வீசினானோ வானத்தில் நின்றபடி
இன்னல்கள் போக்கும் இறை !

-விவேக்பாரதி
21.03.2014

Comments

Popular Posts