தேவதை கண் சிரித்தாள்

நரம்பு உரித்து
நூலாய்த் திரித்துத்
தென்றலை எடுத்துப்
பூக்களாய்த் தொடுத்துத்
தேவதை கண் சிரித்தாள் !

ரத்தமும் உறைய
அக்சிஜென் குறைய
நித்தமும் என்நெஞ்சில்
அவள்முகம் நிறைய
வித்தைகள் செய்து விட்டாள் !

கன்னி கார்நறுங் கூந்தலில் தவழும்
வண்ண மலர்கள் ஆகத் துடித்திடும்
விண்ணில் திரியும் வெள்ளி மீன்களடா !

மண்ணில் ஆடும் மயில் பறவையின்
கண்ணில் தெரியும் சிறு கருவவும்
இன்றிவள் முன்னால் ஆனது வீண்களடா !

-விவேக்பாரதி
30.12.2013

Comments

Popular posts from this blog

மரகதப் பஞ்சகம்

கவிதை ஆண்டாள் - 1

மாதங்களில் அவள் மார்கழி