விஷமக் காரக் கண்ணன்

குழலி சைக்குங் கண்ணன் - வெள்ளிக்
   குழைய ணிந்த கண்ணன் !
அழகு மாதர் தம்மை - அழகால்
   அடிமை யாக்குங் கண்ணன் !

வெண்ணை யுண்ணுங் கண்ணன் - நல்ல
   வேதஞ் சொல்லுங் கண்ணன் !
மண்ணை யுண்ட வாயால் - ஆண்ட
   முழுதுங் காட்டுங் கண்ணன்

ராதை அவளின் காதிற் - பலவாய்க்
   ராகங் கூட்டுங் கண்ணன் !
கீதை சொன்ன கண்ணன் - பொன்னில்
   கிரீடம் கொண்ட கண்ணன் !

நீல வண்ணன் கண்ணன் - அழகு
   நித்தி லந்தான் கண்ணன்
வேல னொத்த அழகன் - அந்த
   விஷமக் காரக் கண்ணன் !


-விவேக்பாரதி
26.02.2015

Comments

Popular Posts