அம்மானை

கோட்டைக் கணபதியைக் கொண்ட திருச்சியது
வாட்டங் கொடுக்கும் வெயில்நகரே யம்மானை
வாட்டங் கொடுக்கும் வெயில்நகரே யாமாகில்
கோட்டைத்தே வர்க்குக் கொளுத்தாதோ யம்மானை ?
   ஊட்டக் குளுமைக்கோ காவிரியுண் டம்மானை !

மீனாளு மாள்கின்ற மீன்கொடி மாமதுரை
தானாகும் தூங்காத் தனிநகரா யம்மானை
தானாகும் தூங்காத் தனிநகரா யாமாகில்
வானோரைப் போல்மக்கள் வாழ்வாரோ அம்மானை ?
   வாலை யரசின்கீழ் வானோரே யம்மானை !

-விவேக்பாரதி
25.03.2016

Comments

Popular Posts