பூஜிமலைக் குறவஞ்சி

ஜப்பானும் கண்டமலை எங்கள்மலை யம்மே 
   சீறுகின்ற பூஜிமலை எங்கள்மலை யம்மே 
ஒப்பற்ற பலகவிகள் போற்றும்மலை யம்மே 
   ஓங்கியுயர் சித்தரெலாம் வாழ்ந்தமலை யம்மே 
தப்பாகப் பெண்டிரையும் மறுத்தமலை யம்மே 
   தமைவளர்க்க சாமுராய்கள் இருந்தமலை யம்மே 
இப்பாரில் பூஜிமலை அழகுமலை யம்மே 
   இனிமையெனப் பனிபடர்ந்த அமுதமலை யம்மே !

ரூதர்போர்ட் என்பவரை ஏற்றமலை யம்மே 
   ராப்பகலாய் அதனழகைக் காட்டுமலை யம்மே 
சேதமாக விமானத்தை செய்தமலை யம்மே 
   சோதியென உள்ளிருந்தே ஒளிருமலை யம்மே 
காதலோடு மலையேற உகந்தமலை யம்மே 
   காட்சிபல வற்றிற்கு நின்றமலை யம்மே 
மீதமுள்ள கதைகளுந்தான் ஏராளம் அம்மே 
   பூஜிமலை எங்களுக்கு இனியமலை யம்மே ! 

To Know more about Mt. Fuji
https://en.wikipedia.org/wiki/Mount_Fuji

-விவேக்பாரதி 
27.03.2015

Comments

Popular posts from this blog

மரகதப் பஞ்சகம்

மாதங்களில் அவள் மார்கழி

கவிதை ஆண்டாள் - 1