குடியரசு பிறந்தது

குடியரசு பொறந்ததுன்னு
குதுகலமாய் ஆட்டம் போட்டோம் !
மிடிமைதுயர் தீருமுன்னு
பாட்டு போட்டோம் !

மிகுதியாச்சு அது குறையல
அட துடிக்கும் மக்கள்
மனம் அடங்கல !

காத்துவெளி மாசுபடா பூமி ஒன்னு
நேத்திரவு தூங்கையில கனாக் கண்டேன்
நாத்து நட்டு வெளச்சல் எல்லாம் பெருகி வந்து ! உயிர்
காத்து நிக்கும் வயல அங்க நானும் கண்டேன் !

அது எல்லாம் வெறும் கனவோ ?
இது எப்போ கையில் வருமோ ?
இளங் காத்து தேச பாத்து
புதுப் பாட்டெழுதி தருமோ ?

மிடிமைதுயர் தீருமுன்னு
பாட்டு போட்டோம் !!

மிகுதியாச்சு அது குறையல
அட துடிக்கும் மக்கள்
மனம் அடங்கல !!

விவேக்பாரதி
02.02.2014

Comments

Popular Posts