சிறுகதைச் சிங்கம்

வியனுலகம் சுற்றியே வீசிடும் கதையின்
இயக்கமும் நின்றதே இன்று - ஜெயகாந்தன்
என்னுஞ் சிறுகதைச் சிங்கமும் சாய்ந்ததே
இன்றெம் கவியில் இருள்!

பலகதை பாய்ச்சிய பைந்தமிழ்ச் சிட்டும்
உலகத்துக் கூட்டை உடைத்து - நிலையான
விண்ணை அடைந்ததே விண்ணோர் கதைகேட்டு
எண்ணத்தில் சேர்ப்பார் எழில்

காலனே எங்கள் கதைசொல்லும் பீரங்கியைக்
காலடியில் வைக்கஆசை கொண்டாயோ - காலங்கள்
ஆயிரம் சென்றாலும் ஆணிமுத்தாய் மின்னிய
தோயிவன்க தையின் தொடர்!

(எழுத்தாளர் ஜெயகாந்தன் மறைவுக்கு எழுதியது) 

-விவேக்பாரதி
09.04.2015

Comments

Popular Posts