ரதி அக்னி ஹோத்ரி

கரிசக் காட்டு பாத வழி
பரிசம் பண்ணி போறவளே !

உன்னோட நெஞ்சுக் குள்ள
குடியிருக்க என்ன வெல
கேட்குறேனே சொல்லு புள்ள
கேட்காட்டி நான் மண்ணுக்குள்ள !

அடியே
ரதி அக்னி ஹோத்ரி
கோடியே மாமன நீ '
கொஞ்சாம தான் போவியா

துடியா துடிக்கிறேனே
பக்கத்துல வாரியா ?
மடியில படுத்துறங்க
மார்கழியில் தேதி பார்த்தேன்

மொளகா
கடிக்கையிலும் உன்முகம்
தானடி ! கள்ளு
குடிக்கையில் நீவேருவ தேனடி !

-விவேக்பாரதி
20.07.2014

Comments

Popular Posts