வெண்ணிலாக் காதல்

வெண்ணிலாவே !
வெண்ணிலாவே !
பெண்ணிலாவே !
என் நிலாவே !

உன்னைக் கண்ட
நொடி முதலாய்
எந்தன் நெஞ்சம்
என்வசம் இல்லை !

நீ குளிர்ந்தப் பார்வையினை வீசுகையில்
நான் குழந்தைப் போலவே சிரிப்பதும் ஏன் ?

நீ மேகம் எடுத்து உன்னை மூடிக் கொண்டு
சிறு ஊடல் விளையாட்டு செய்வதும் ஏன் ?

உன் முகத்தைப் பார்த்திட
ஆசை தான் !
உன் குரலோ குயிலின்
செந்தமிழ் ஓசை தான் !

வெண் திரை கழற்றி
உடல் சிலிர்க்க
உன் பார்வைக் கனையைப்
பாய்ச்சிவிட்டால் என்ன ?

அமாவாசைக் காணும் தினம்
என் கண்கள்
தூக்கத்தை தொலைக்கின்றன !
பௌர்ணமி நிலவே
உனைக் காண்கையில்
என்னே உன் அழகென்று
மலைக்கின்றன !

நீ வந்தால்
இரவினில் புது ஒளி பாயுமே !

நாள் தோறும் தேய்கிறாய்
அதவும் நாணத்திலா ?

தேய்ந்தப் பின் வளர்கிறாய்
இதுவும் மோகத்திலா ?

என்மனம் சிறைப் பிடிக்கிறாய்
அதவும் காதலிலா !

விவேக்பாரதி
14.02.2014

Comments

Popular posts from this blog

மரகதப் பஞ்சகம்

மாதங்களில் அவள் மார்கழி

கவிதை ஆண்டாள் - 1