கனவின் காட்சி

எரிமலை நிறத்தில் வானம்
எத்திக்கும் குயிலின் கானம்

மெல்லவந்து வருடும் காற்று
மேல்வளர்ந்த தென்னங் கீற்று

கண்கவரும் பச்சைப் போர்வை
அதில்பூத்த மலரின் கோர்வை

பெண்ணொருத்தி நடக்கும் ழகு
என்நெஞ்சோ எரியும் மெழுகு

மேயுகின்ற கண்கள் பருந்து
கன்னியவள் அவைக்கு விருந்து

சிந்திவரும் மேகக் கண்ணீர்
இதழ்ரசமோ இனிக்கும் பன்னீர்

வானவில் தரியில் சேலை
உடுத்திவரும் அழகுச் சோலை

தேனூற்றும் எழுத்தாணி முனை
வைரத்தை அறுகின்ற கணை

நாவடக்கி பேசும் மானிடம்
வயல்வெளிகள் நிறைந்த கானிடம்

இவைகண்டேன் இல்லை சாட்சி
எல்லாமே கனவின் காட்சி

-விவேக்பாரதி
25.07.2014

Comments

Popular Posts