ஆனந்தப் பையுள்

மஞ்சுலவும் வெண்மதியும் வெள்ளை உடையுடுத்தி
நெஞ்சுபதைப் புற்றே இருப்பதெல்லாம் - மஞ்சளுடன்
மங்களமும் சேர்த்தே தொலைத்திட்ட பெண்முகமும்
மங்கலுறக் கண்டபின் தான்!

(ஆனந்த பையுள் என்பது புறத்தினைகளில் வரும் துறைகளில் ஒன்று அதாவது கணவனை இழந்து வாடும் மனைவியின் துயரத்தைப் பாடுவது ஆனந்த பையுள்.)

-விவேக்பாரதி

Comments

Popular posts from this blog

மரகதப் பஞ்சகம்

மாதங்களில் அவள் மார்கழி

கவிதை ஆண்டாள் - 1