சிலேடை - நண்பரும் மழையும்

அழைப்பின்றி முன்னே அவதரித் தென்றும்
விழைவன தந்து ! விழும்போ - தழுதுழன்று
நிற்கும் செயலொன்றால் நீங்காத நண்பர்களும்
பொற்புடை மாரியைப் போன்று !

-விவேக்பாரதி
 02.08.2015

Comments

Popular Posts